கேரளா: பிஎப்ஐ முன்னாள் மாநில செயலாளரை அதிரடியாக கைது செய்தது என்ஐஏ

திருவனந்தபுரம்,

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியை தடை செய்தபோது அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கட்சியின் கேரள மாநில முன்னாள் செயலாளராக இருந்த ரவுப்பை மட்டும் கைது செய்யவில்லை. இதையடுத்து கட்சியை தடை செய்தபோது கேரளாவில் பந்த் அறிவித்து கேரளா முழுவதும் பல்வேறு கலவரங்களை ஏற்படுத்தி அரசு சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினர்.

இந்நிலையில் என்ஐஏ அதிகாரிகள் இவரை தேடி வந்த நிலையில் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி கரும்புள்ளி பகுதியில் உள்ள அவரது வீட்டை கண்காணித்து வந்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு அவரது வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டள்ளனர்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியை தடை செய்தபோது, பல தலைவர்களை தலைமறைவாக செல்ல உதவியது, பல்வேறு கலவரங்களை தூண்டி விட்டது என பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது உள்ள நிலையில், இவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தகக்து.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.