குஜராத் தொங்கு பால விபத்தில் பாஜக எம்.பி.யின் உறவினர்கள் 12 பேர் விபத்தில் இறந்துவிட்ட சோகம்..!

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பாஜக எம்.பி.ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 12  பேர் இறந்து இருப்பது அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்து இருக்கிறது. 

மோர்பி நகரத்தில் உள்ள கேபிள் பாலத்தின் மீது நேற்று மாலை 500 பேர் திரணடிருந்த போது விபத்து நேரிட்டது. தொங்குப் பாலம் திடீரென அறுந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 400 பேர் மர்பி ஆற்றில் விழுந்தனர்.

ஆற்றில் 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் ஓடியதால் நீந்தி கரை சேர முடியவில்லை. இதனால் பலர் பாலத்தின் விழுந்த பகுதியைப் பிடித்துக் கொண்டு தொங்கியபடி உயிருக்குப் போராடினர்.

பாலம் அறுந்து விழுந்த தகவல் பரவியதும் உள்ளுர் மக்கள், போலீசார், தீயணைப்பு துறையினர் முதலில் மீட்புடப பணியில் ஈடுபட்டனர். இதன் பிறகு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்களும் மீட்புப் பணியில் இறங்கினர்ர்கள்.

விடிய விடிய நடைபெற்ற தேடுதல் பணியில் 177 பேர் மீட்கப்பட்டன்ர். இவர்களில் காயம் அடைந்திருந்தவர்கள் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்கப் பட்ட சடலங்கள் பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுடையது ஆகும்.

இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டை இரண்டாது நாளும் தொடருகிறது.குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் மற்றும் அமைச்சர்கள் மீட்புப் பணிகளை பார்வையிட்டனர்.

நாட்டையே உலுக்கி இருக்கும் விபத்தில் ராஜ் காட் தொகுதி பாரிதீய ஜனதா கட்சி எம்பி.யின் குடும்பத்தை சேர்ந்த 12 பேர் இறந்து விட்டது தெரியவந்துள்ளது. அவருக்கு அனைவரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தொங்குப்பாலம் பழுதடைந்ததால், புனரமைக்கப்பட்டு 5 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது. அரசின் டெண்டரைப் பெற்று தனியார் நிறுவனம் ஒன்று புனரமைப்பு பணியை மேற்கொண்டது.

பணி முடிந்த பின் அதிகாரிகள் பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதித்து சான்றிதழ் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விபத்தை அடுத்து குஜராத்தில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ரத்து செய்துவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.