#BREAKING  : பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று சற்று குறைள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2,009க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு ரூ.116 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகபயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 1893  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. 

அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் சிலிண்டர் ஒன்று ரூ.1068.5க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.