குட் நியூஸ்.. பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாளை சிறப்பு முகாம்..!

பொதுமக்களின் வசதிக்காக, சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காவல்துறை அனுமதிச் சான்றிதழுக்கான நாள் அதிகரித்து வருவதால், அதன் தேவைக்கு ஏற்ப, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் (சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் மற்றும் புதுச்சேரி) அதிகார வரம்பிற்கு உட்பட்ட பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை (5ம் தேதி) செயல்படும்.

பாஸ்போர்ட் பயன்பாடு உள்ளவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள 4 சேவை மையங்களிலும் இந்த சிறப்பு பிரசாரத்தின் கீழ் 1400 பாஸ்போர்ட்டுகள் கையாள உத்தரவிடப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேற்று விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ‘வளர்ச்சியடைந்த தேசத்திற்கு ஊழல் இல்லாத இந்தியா’ என்பதை மையமாக வைத்து கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் வரவேற்று பேசினார். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி தலைமை வகித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு விஜிலென்ஸ் விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.