மீண்டும் இஸ்ரேல் பிரதமராக பதவி ஏற்கிறார் நெதன்யாகு| Dinamalar

ஜெருசலேம் இஸ்ரேல் பார்லிமென்ட் தேர்தலில், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் அதிதீவிர யூத மத கூட்டணி ஆகியவற்றை உள்ளடக்கிய வலதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

மேற்காசிய நாடான இஸ்ரேலில் சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடக்கிறது.

மொத்தமுள்ள 120 இடங்களில், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் அவரது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மொத்தம் 64 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து, 1996 – 99, 2009 – 21 என இஸ்ரேலின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்த பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக இஸ்ரேலில் நிலவி வந்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

இதையடுத்து, நெதன்யாகுவுக்கு காபந்து அரசின் பிரதமராக பதவி வகித்து வரும் யாயிர் லாபிட் வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஆட்சி மாற்றத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.தேர்தல் முடிவுகள் வரும் 9ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. அதன் பின், ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், புதிய அரசு அமைக்குமாறு நெதன்யாகுவுக்கு அழைப்பு விடுக்க உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.