முதல்வர் ஸ்டாலினுக்கே விபூதி அடிக்க பார்த்த அமைச்சர் சக்கரபாணி?! முக்கிய பதவி பறிப்பு!!

தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்கிறது. இந்த கழகத்தின் மூலம் அரிசி கோதுமை பருப்பு வகைகள் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிடங்கில் சேமிக்கப்படும். அவ்வாறு சேமிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக உருகி வழிந்த வெள்ளம் பல்லி இருந்த புலி கலப்படம் செய்யப்பட்ட மிளகு என வழங்கப்பட்ட அனைத்து பொருள்கள் மீதும் புகார்கள் எழுந்தது. 

இந்த நிலையில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி துறை ரீதியிலான ஆய்வுக் கூட்டத்தை ஸ்டாலின் நடத்தினார். அந்த கூட்டத்தில் புகார்களுக்கு காரணமான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்ததோடு தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த நிறுவனங்கள் கருப்பு பட்டியில் சேர்க்கும் படி உத்தரவிட்டார். அதன்படி தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் கருப்பு பட்டியில் சேர்ந்ததோடு 7 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அதே நிறுவனத்திடம் இருந்து பருப்பு பாமாயில் கொள்முதல் செய்யப்படுவதாக மீண்டும் புகார்கள் எழுதன. இதன் காரணமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த அமைச்சர் சங்கரபாணி நீக்கப்பட்டதாக தெரிய வருகிறது. 

இதற்கு காரணம் பொங்கல் பரிசு தொகையில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க முதல்வர் உத்தரவிட்டும் அதை நிறைவேற்ற சிலர் இடையூறாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)  தலைவர் பொறுப்பு என்பது நியமனப் பொறுப்பு என்பதால் தமிழ்நாடு உணவுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு தற்பொழுது இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.