பஜாஜ் வழங்கும் டோமினார் பயணங்கள் | Dinamalar

புனே,:பஜாஜ் நிறுவனம் வழங்கும், ‘வடகிழக்கு மற்றும் ரான் ஆப் கட்ச்’ சுற்றுப் பயணங்களை முடித்துவிட்டு, ‘கொங்கன் கடற்கரை’ நோக்கி பயணத்தை துவங்யுள்ளனர், ‘பஜாஜ் டோமினார்’ வாகன ஓட்டிகள்.

டோமினார் பைக்கில் இந்தியாவை சுற்றும் வகையில், வாகன ஓட்டிகளை திரட்டி,இந்த சுற்றுப் பயணத்தை செயல்படுத்தி வருகிறது, பஜாஜ் நிறுவனம்.

கடந்த 8ம் தேதி மும்பையில் இருந்து துவங்கிய இந்த சுற்றுப் பயணம், இன்றுடன்முடிவடைகிறது. இந்த இடைவெளியில், வாகன ஓட்டிகள் பச்சை பசேலென இருக்கும் காடுகள், பெரிய பெரிய மலைகள், அழகான கிராமங்கள், கண்ணை கவரும் அரபிக்கடல் மற்றும் பல சுற்றுலா தலங்கள் என பல இடங்களைகடந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.