இன்று உலக கருணை தினம்| Dinamalar

கருணை என்பது அனைவரிடமும் எவ்வித பாகுபாடின்றி அன்பு செலுத்துவது. மதம், அரசியல் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு விளங்கும் கருணையை போற்றும் விதமாக . ஜப்பானின் டோக்கியோவில் தொடங்கப்பட்ட கருணை அமைப்பு சார்பில் 1998 முதல் நவ. 13ல் கடைபிடிக்கப்படுகிறது. கருணையுடன் இருப்பது மகிழ்ச்சிக்கான ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். இதன் காரணமாகவே மருத்துவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை போலவே கருணை உணர்வோடும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். கருணை உணர்வோடு
இருப்பது நமக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மைகளை கொடுக்கக்கூடியது.

கருணை என்பது, ஒரு எண்ணம், உணர்வு, நம்பிக்கை. அதனால் பிறருக்கும் நமக்கும் நன்மை கிடைக்கிறது. ஆனால் கருணையில்லாமல் நடந்துகொள்வது என்பது, பிறரின் நலன் குறித்து யோசிக்காமல் இருப்பது. ஒரு நம்பிக்கையற்ற தன்மை அது.

கருணைக்கு இன்னொரு பெயர் உள்ளது. அதாவது அன்னை தெரசா. மனிதம், கனிவு ஆகிய உயர்ந்த அழகிய பண்புகளே ஒருவரை உயர்த்தும் என்பதற்குச் சான்று இவர். பிறர் பசியாறுவதை கண்டு இன்பம் கண்ட அவரின் புகழ் மனிதன் வாழும் மட்டும் மறையாது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.