Video: குறுக்குவழியில் சென்று ரயிலுக்கு அடியில் மாட்டிய நபர்; கடைசி நொடிவரை திக்… திக்…திக்

பீகாரின் பாகல்பூர் என்ற பகுதியில் ரயில் நிலையத்தின் ஒரு பிளாட்ஃபார்மில் இருந்து மற்றொரு பிளாட்ஃபார்மிற்கு செல்ல குறுக்குவழியில் ஒருவர் சென்றுள்ளார். அதாவது, நின்றுகொண்டிருந்த ரயிலுக்கு கீழே சென்று, பிளாட்ஃபார்மை கடக்க முயன்றுள்ளார். 

அப்போது, அவர் ரயிலுக்கு அடியில் சென்றபோது, அந்த ரயில் புறப்பட்டுள்ளது. எனவே, அவர் ரயிலுக்கு அடியில் சிக்கியுள்ளார். சுற்றியிருந்த அனைவரும் அவரின் நிலையைக்கண்டு பதறிய நிலையில், ரயில் முழுமையாக கடந்து சென்றதும் அவர் எவ்வித காயங்களும் இன்றி எழுந்து சென்றார். அதனை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளார், அவைதான் தற்போது வைரலாகி வருகின்றனது.

அந்த வீடியோவில், சரக்கு ரயில் வேகமாக சென்றுகொண்டிக்க, ரயிலின் அடியில் தண்டாவளங்களின் மத்தியில் ஒருவர் தலையை தாழ்த்தி படுத்திருப்பது தெரியும். தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு பதற்றம் அடைவதும் அதில் பதிவாகியிருந்தது. ரயில் போகும் வரை தலையை உயர்த்திவிட வேண்டாம் என அனைவரும் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.  பின்னர், ரயில் சென்ற உடன் அடையாளம் தெரியாத அந்த நபர் எழுந்துகொண்டு தனது பேக் உடன் நடந்து செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

இச்சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள்,”பாகல்பூர் ரயில் நிலையத்தில் ஒரு பிளாட்ஃபார்மில் இருந்து மற்றொரு பிளாட்ஃபாரத்திற்கு செல்ல முயற்சித்தார். ஆனால், ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்தாமல் குறுக்குவழியை அதாவது ரயிலுக்கு அடியில் பிளாட்ஃபாரத்தை கடப்பது என முடிவு செய்து. ரயிலுக்கு அடியில் சென்றார். அப்போது ரயில் புறப்படவே, அவர் அதன் அடியில் சிக்கிக்கொண்டார்” என கூறுகின்றனர். 

தற்போது, அந்த நபர் யார் என்ற விவரம் தெரியாத நிலையில், அவர் மீது இதுவைர எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து ரயில்வே தரப்பிலும் ஏதும் தகவல் வெளிவரவில்லை. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இணையத்தில் அந்த நபரை பலரும் திட்டித்தீர்த்து வருகின்றனர். மேலும், இதுபோன்று மீண்டும் செய்யாமலிருக்க அவருக்கு கடும் அபராதங்களுடன் கூடிய சிறை தண்டனை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலரோ, அவர் உயிருடன் தப்பித்தை எண்ணி மன நிம்மதி அடைந்ததாக தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்கள்… மனம் பதற வைக்கும் CCTV காட்சிகள்!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.