கௌரவ பி.பி.தேவராஜ் அவர்கள் எழுதிய “இலங்கை மலையகத் தமிழர் வரலாற்றின் சில துளிகள்”நூல் வெளியீட்டுவிழா

கௌரவ பி.பி.தேவராஜ் அவர்கள் எழுதிய “இலங்கை மலையகத் தமிழர் வரலாற்றின் சில துளிகள்”நூல் வெளியீட்டுவிழாவில் உரைநிகழ்த்திய உயர் ஸ்தானிகர், இந்தியாவுக்கும் மலையக தமிழர்களுக்கும் இடையிலான நீண்டகாலஉறவுகள் மற்றும் ஆழமானதொடர்புகள் குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டிருந்தார்.

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இந்நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

2017இல் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மலையகத்திற்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் குறித்து இங்கு நினைவூட்டியிருந்த உயர் ஸ்தானிகர், இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் நலன்களுக்காக இந்திய அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பினையும் உறுதிப்படுத்தியிருந்தார்.

2023 ஜனவரியில் இந்தூரில் நடைபெறும் ப்ரவாசி பாரதீய திவாஸில் மலையகத் தமிழ் மக்களை ஆர்வத்துடன் பங்கேற்குமாறும் உயர் ஸ்தானிகர் ஊக்குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

India in Sri Lanka (High Commission of India, Colombo

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.