அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 40 சீட்… சீக்ரெட்டை உடைத்த டிடிவி!

அமமுக கட்சிக்கான பிரத்யேக இணையதளத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்ற அண்ணாவின் நிலைப்பாடே அமமுகவின் நிலைப்பாடு. சனாதனம் குறித்தெல்லாம் ஆளுநர் பேச வேண்டிய அவசியமில்லை. வேறு வேலையில்லாமல் ஆளுநர் இவ்வாறு பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை அமவ்படுத்திட வேண்டும்.

திமுகவை எதிர்ப்பதற்காக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக கூட்டணி அமைக்கும். நாட்டின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அமமுக அணிலாக செயல்படும்.

அதிமுக என்ற கட்சி செயல்படாத நிலையில், அதன் நிலைமை இன்று மோசமாக உள்ளது. கட்சிக்கு உரிமை கோரி இபிஎஸ்,

இருவரும் நீதிமன்றம் சென்றுள்ளதால் அதிமுக குறித்து மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அமமுக தயாராகவே இருந்தது. ஆனால் அந்த தேர்தலில் 40 சீட்களை கேட்டோம். அவர்கள் கொடுக்க தயாராக இல்லை. கட்சியில் ஒரு சிலரின் பதவி ஆசையால் கூட்டணி அமையாமல் போய்விட்டது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.