இஸ்தான்புல் நகர குண்டுவெடிப்பு…தப்பி ஓடிய பெண் குண்டுதாரி: cctv காட்சிகளால் அதிர்ச்சி!


துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த பயங்கரமான குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், சந்தேகத்திற்குரிய பெண் குண்டுதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்தான்புல் நகரில் குண்டுவெடிப்பு

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்-லின் மையப்பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இஸ்தான்புல்லின் பிரபலமான பாதசாரிகளின் இஸ்டிக்லால் அவென்யூவில் நேற்று நவம்பர் 13ம் திகதி இந்த அதிர்ச்சியூட்டும் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நகரின் மையப்பகுதியில் உள்ள பரபரப்பான ஷாப்பிங் தெருவில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில், ஆறு பேர் வரை கொல்லப்பட்டனர், மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் நகரின் மையப்பகுதியில் பறந்ததுடன், அப்பகுதியில் பாதுகாப்பிற்கான சைரன்கள் ஒலித்தன.

பெண் குண்டுதாரி கைது

6 பேர் வரை கொல்லப்பட்ட இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை ஆராயந்த பொலிஸார், சிசிடிவி படங்களில் சந்தேகத்திற்குரிய பெண் ஒருவர் ரோஜாப் பூவை கையில் வைத்துக்கொண்டு சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிய காட்சிகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. 

46 பேர் வரை கைது செய்யப்பட்ட நிலையில், இந்த தாக்குதலின் முக்கிய சந்தேக நபரான சிரிய பெண் அஹ்லாம் அல்பாஷிரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்தான்புல் நகர குண்டுவெடிப்பு…தப்பி ஓடிய பெண் குண்டுதாரி: cctv காட்சிகளால் அதிர்ச்சி! | Female Bomber Arrested Terror Blast In Istanbul

துருக்கி ஜனாதிபதி கண்டனம்

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் இந்த சம்பவத்தை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கண்டித்துள்ளார், அதில் இது கொடூரமான தாக்குதல், அங்கு பயங்கரவாதத்தின் வாசனை உள்ளது.

பயங்கரவாதத்தின் மூலம் துருக்கியையும் துருக்கி நாட்டையும் கைப்பற்றும் முயற்சி இன்றோ நாளையோ அதன் இலக்கை எட்டாது.
தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று மக்கள் உறுதியாக நம்பலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்தான்புல் நகர குண்டுவெடிப்பு…தப்பி ஓடிய பெண் குண்டுதாரி: cctv காட்சிகளால் அதிர்ச்சி! | Female Bomber Arrested Terror Blast In Istanbul



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.