பாகிஸ்தானின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவன்; பாடகர் அத்னன் சமி ஆவேசம்.!

இங்கிலாந்தில் பாகிஸ்தானிய தந்தைக்கு பிறந்தவர் அத்னன் சமி. பாகிஸ்தான் குடியுரிமையை ஒப்படைத்துவிட்டு, கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்திய குடிமகனாக இருந்து வருகிறார். இந்திய இசை அரங்கில் பிரபலமான அத்னன் சமிக்கு, கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.

இந்தநிலையில் பாடகர் அத்னன் சமி, முன்னாள் பாகிஸ்தான் நிர்வாகத்தை கடுமையாக தாக்கி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘‘ பாகிஸ்தான் அரசு எனக்கு என்ன செய்தது என்பதை விரைவில் அம்பலப்படுத்த உள்ளேன். பாகிஸ்தான் மீது எனக்கு ஏன் இவ்வளவு அவமதிப்பு என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு நல்லவர்களாக இருந்த பாகிஸ்தான் மக்கள் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை என்பதே கடினமான உண்மை. என்னை நேசிக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன்.

View this post on Instagram A post shared by ADNAN SAMI (@adnansamiworld)

ஆனால் பாகிஸ்தானின் அரசு நிர்வாகத்தி எனக்கு பிரச்சினைகள் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் என்னை அவ்வாறு தான் நடத்தினார்கள். பல ஆண்டுகளாக அந்த அமைப்பு எனக்கு என்ன செய்தது என்பது, என்னை உண்மையாக அறிந்தவர்களுக்கும் தெரியும். இது இறுதியில் நான் பாகிஸ்தானை விட்டு வெளியேற முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியது. சரியான தருணத்திற்காகத் தான், இத்தனை நாட்களாக நான் அமைதியாக இருந்தேன். எனவே விரைவில் பல உண்மைகளை அம்பலப்படுத்த உள்ளேன். அது பலரையும் அதிர்ச்சியடைச் செய்யும்’’ என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

சீனாவின் சாதனையை இந்தியா முறியடிக்குமா?..

அவருடைய இந்த பதிவிற்கு பலர் கமெண்ட் கொடுத்துள்ளன. பலர் இந்தியர்கள் அவருடன் இருப்பதாகக் கூறியுள்ளனர். “இந்தியா உங்களுடன் உள்ளது” என்று ஒருவர் எழுதினார். மற்றொருவர், “நீங்கள் இந்தியாவின் பெருமை அத்னன் ஜி. உங்கள் இசையால் உலகை மயக்கிக்கொண்டே இருங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார். பிரபல பாடகரின் இந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.