சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட பிஸ்தா ஹவுஸ் விமானம் ஒன்று மேம்பாலத்தின் கீழ் சிக்கிகொண்டது

ஐதராபாத்: சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட விமானம் ஒன்று மேம்பாலத்தின் கீழ் சிக்கிகொண்டது. மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் ஒன்று பழைய விமானத்தை வாங்கி அதனை ஓட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக கொச்சியில் ஒரு பழைய விமானத்தை வாங்கிய அந்த நிறுவனம் அதனை சாலை வழியாக ஐதராபாத் கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளது.

இதற்காக ராட்சத லாரியில் ஏற்றப்பட்ட விமானம் சாலை வழியே சென்றபோது ஆந்திர மாநிலம் ​​பாபட்லா மாவட்டம் மேதரமெட்லாவில் உள்ள மேம்பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. சம்பவம் அறிந்து அந்த பகுதியில் சூழ்ந்த பொதுமக்கள் இதனை கண்டு கழித்ததோடு வீடியோவாகவும் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேம்பாலத்தில் இருந்து அந்த விமானத்தை சேதமின்றி மீட்கும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வேறு வழியில் விமானம் ஐதராபாத் கொண்டுவரப்படும் எனவும் பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.