பன்முக படைப்பாளி பஞ்சு அருணாச்சலத்திற்கு விழா – இளையராஜா, ரஜினி, கமல் பங்கேற்பு

தமிழ் சினிமாவின் சகலகலா வித்தகர் என போற்றப்பட்டவர் மறைந்த பஞ்சு அருணாச்சலம். பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்டவர். இன்று இந்திய திரையுலகமே கொண்டாடும் இசைஞானி இளையராஜாவை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் இவர் தான். அதோடு நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரின் பல படங்களை தயாரித்து அவர்கள் பெரிய அளவில் வெற்றி பெற வழிவகுத்தவர்களில் இவரும் ஒருவர் என்றே சொல்லலாம்.

பஞ்சு அருணாச்சலத்தின் 80வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக டிச., 2ம் தேதி சென்னையில் ‛பஞ்சு 80' என்ற பெயரில் பிரமாண்ட விழா கொண்டாடப்படுகிறது. இதை அவரது மகனும், நடிகருமான சுப்பு பஞ்சு முன்னெடுத்து நடத்துகிறார். இதில் இளையராஜா, பாரதிராஜா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. மேலும் திரையுலகில் உள்ள பல கலைஞர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

கடந்தாண்டே இந்த விழா நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா பிரச்னையால் இந்த நிகழ்வு தள்ளிப்போன நிலையில் இப்போது அந்த விழாவை வருகிற டிச., 2ல் பிரமாண்டமாய் நடத்த உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.