மிசோரம் கல்குவாரி விபத்து சம்பவம் தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்| Dinamalar

ஐசாவ்ல், மிசோரமில், கல் குவாரியில் கற்கள் சரிந்து விழுந்த சம்பவத்தில், ௧௨ தொழிலாளர்கள் புதைந்தனர். இதில், ௧௧வது நபரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ‘நோட்டீஸ்’ அனுப்ப நேற்று உத்தரவிட்டுள்ளது.

மிசோரமில் முதல்வர் சோரம் தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாதியல் மாவட்டம், மவுதார் கிராமத்தில் உள்ள ஒரு கல்குவாரியை, தனியார் நிறுவனம் எடுத்து நடத்தி வருகிறது.

இந்த குவாரியில், ௧௪ம் தேதி கற்கள் சரிந்து விழுந்த விபத்தில் ௧௨ தொழிலாளர்கள் புதைந்து பரிதாபமாக பலியாகினர்.

இதுவரை ௧௦ தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று ௧௧வது நபரின் உடல் மீட்கப்பட்டது. இன்னும் ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும், மேற்குவங்கம், அசாம், ஜார்க்கண்ட், திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், கல்குவாரி நிறுவன அதிகாரிகள் வரும் ௨௮ல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.