தமிழகத்தில் இனிமே இது இருக்காது… அமைச்சர் சக்கரபாணி உறுதி!

திருவாரூர் தெற்கு வீதியில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன் என மொத்தம் 1,262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

மேலும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

நாகை: அடிதடியில் இறங்கிய திமுக- பாஜகவினர் – பரபரப்பு வீடியோ!

அப்போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது, “ஒரு நெல்மணி கூட மழை நீரில் வீணாகாதவாறு 238 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 20 இடங்களில் சேமிப்பு குடோன் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் சேமிப்பு குடோன் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் 103 இடங்களில் திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் இருக்கின்றன. இனிமேல் திறந்த வெளியில் எங்கேயும் வருகின்ற காலங்களில் தமிழ்நாட்டில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கள் இருக்காது என உறுதியாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி மாவட்ட ஊராட்சி தலைவர் தலைவர் தலையாமங்கலம் பாலு நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.