35 ஆயிரம் பேருக்கு வேலை: இந்தியன் ரயில்வே அறிவிப்பு..!

இந்தியன் ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ஸ்டேஷன் மாஸ்டர்கள், கூட்ஸ் கார்டுகள், கமர்ஷியல் பிரிவு ஊழியர்கள், டிக்கெட் கிளார்க், சீனியர் கிளார்க் உள்ளிட்ட தொழில்நுட்பம் சாராத பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை ரயில்வே தேர்வு வாரியம் நடத்தி உள்ளது.

மொத்தம் 35,281 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணபித்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள இந்த பணியிடங்களுக்கு பல கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளின் முடிவு, நியமனம் தொடர்பான அட்டவணையை ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்டது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ‘ரயில்வேயில் 6-ம் நிலை பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இதில், 7,124 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்டவை தற்போது நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 21 மண்டல ரயில்வே தேர்வு வாரியங்களில் 17 மண்டலங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. மீதி உள்ள மண்டலங்கள் விரைவில் தேர்வு முடிவுகளை அறிவிக்கும்.

5-ம் நிலை பணியிடங்களுக்கான முடிவுகள் இந்த மாதம் இறுதியில் இருந்து அடுத்த மாதம் 2-ம் வாரத்துக்குள் வெளியிடப்படும். 4-ம் நிலை ஊழியர்களுக்கான முடிவுகள் வரும் ஜனவரி 2-ம் வாரம் வெளியிடப்பட்டு பிப்ரவரி மாதத்துக்குள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும். 3-ம் நிலை பணியிடங்களுக்கு மார்ச் முதல் வாரத்துக்குள் முடிக்கப்படும். அதேபோல் 2-ம் நிலை பணியாளர்களுக்கு மார்ச் மாதம் கடைசிக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.