இனி ஆட்குறைப்பு இல்லை… ஆள் சேர்ப்பு தான்… எலான் மஸ்கின் அடுத்த அதிரடி!

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் போன்ற அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, இப்போது ஊழியர்களுக்கு நிமத்தி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ட்விட்டரின் 7,500 ஊழியர்களில் மூன்றில் இரண்டு பங்கு பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தற்போது, ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்போது நிறுவனத்தில் பணிநீக்கங்கள் இருக்காது என்பதோடு,  புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று மஸ்க் கூறினார்.

ஊழியர்களுடனான சந்திப்பில், ட்விட்டர் இப்போது பொறியியல் மற்றும் விற்பனை துறையில் ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக மஸ்க் கூறினார் என தி வெர்ஜ் அறிக்கை  கூறுகிறது. மேலும், பொறுத்தமான பரிந்துரைக்குமாறு ஊழியர்களை அவர் கேட்டுக் கொண்டார். அந்த அறிக்கையில், புதிய வேலைகளில் மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மஸ்க் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தை போல நிறுவனத்தின் தலைமையகத்தை டெக்சாஸில் வைத்திருக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும், தலைமையகம் டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவிலும் இயக்கப்படலாம் என தெரிவித்தார். மஸ்க் ஊழியர்களிடம் கூறினார், “நாங்கள் தலைமையகத்தை டெக்சாஸுக்கு மாற்றினால், ட்விட்டர் இடதுசாரியிலிருந்து வலதுசாரிக்கு சென்றுவிட்டது என்ற செய்தியை அது அனுப்பும் என்று நினைக்கிறேன், அது அப்படியல்ல.” இது ட்விட்டரை வலதுசாரி கையகப்படுத்துவது அல்ல, என்றார். இது ட்விட்டரில் கருத்துரிமையை பாதுகாப்பதாகும் என்றார்.

மேலும் படிக்க |  வொர்க் ப்ரம் ஹோம் இனி கிடையாது… அதிரடி காட்டும் எலான் மஸ்க்!

மறுபுறம், புதிய முறையில் ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். வெவ்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களை அங்கீகரிக்க வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார். ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிய பிறகு, ப்ளூ டிக் மாதம் கட்டணமாக 8 அமெரிக்க டாலர்களுக்கு கிடைக்கும் என்று மஸ்க் கூறியிருந்தார். இந்த பேட்ஜ், சமபந்தப்பட்ட ட்விட்டர் கணக்கு சரிபார்க்கப்பட்டது என்பதை குறிக்கிறது. 

மஸ்க் திங்களன்று ஒரு ட்வீட்டில், ‘போலி கணக்குகளை நிறுத்துவதில் நம்பிக்கை ஏற்படும் வரை புளூ டிக் புதிய வழியில் அறிமுகப்படுத்தும் திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. ஒருவேளை மக்களை விட நிறுவனங்களுக்கு வெவ்வேறு வண்ணங்கள் பயன்படுத்தப்படும்.

பயனர்கள் போலி கணக்குகளை உருவாக்கி, அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செய்தி நிறுவனங்கள் பெயரில் கணக்குகளை தொடங்கி ப்ளூ டிக் பெற வாய்ப்பு உள்ளது என ப்ளூடிக் ஆரம்ப திட்டம் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன. இதுபோன்ற சூழ்நிலையில், தவறான தகவல்களை பரப்புவதற்கான வாய்ப்பு உள்ளது என விமர்சனங்கள் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் – கட்டண விவரம் அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.