கொதிக்கும் வெப்பம்… புலம்பெயர் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் வதைக்கும் கட்டார்


கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் கோலாகலமாக துவங்கியுள்ள நிலையில், பார்வையாளர்களுக்கான தங்கும் விடுதிகளை கட்டி முடிக்க புலம்பெயர் தொழிலாளர்கள் நாளுக்கு 14 மணி நேரம் வரையில் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகெங்கிலும் இருந்து திரண்டுள்ள பார்வையாளர்கள்

கட்டார் கால்பந்து உலகக் கிண்ணம் திருவிழாவானது கோலாகலமாக துவங்கியுள்ளது.
மொத்தம் 8 பிரம்மாண்ட அரங்கங்களில் விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கொதிக்கும் வெப்பம்... புலம்பெயர் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் வதைக்கும் கட்டார் | Qatar Migrant Workers Putting 14 Hour Shifts

@reuters

இந்த நிலையில், போட்டிகளை கண்டுரசிக்க உலகெங்கிலும் இருந்து திரண்டுள்ள பார்வையாளர்களுக்கான தங்கும் விடுதிகள் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு இரவு தங்க 180 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்க இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட விடுதிகள் பல பாதி பணிகள் முடிவடைந்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொதிக்கும் வெப்பம்... புலம்பெயர் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் வதைக்கும் கட்டார் | Qatar Migrant Workers Putting 14 Hour Shifts

@reuters

இதனால் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் நாளுக்கு 14 மணிநேரம் உழைக்க கட்டாயப் படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
நாளுக்கு 25 பவுண்டுகள் ஊதியமாக பெறும் இரண்டு இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள், விரைந்து வேலையை முடிக்க மேலதிகமாக 25 பவுண்டுகள் ஊக்கத்தொகை அளிக்க நிர்வாகம் முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொதிக்கும் வெப்பநிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள்

கொதிக்கும் 30°C வெப்பநிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் குறைந்த ஊதியத்தில் நாளுக்கு 14 மணிநேரம் வரையில் உழைப்பதாக கூறுகின்றனர்.

அடுத்த 5 நாட்களில் வேலையை மொத்தமாக முடிக்க வேண்டும் எனவும், இல்லையேல் எவரும் வெளியேற முடியாது என மிரட்டல் விடுப்பதாகவும் அந்த இந்தியர்கள் இருவர் கூறியுள்ளனர்.

கொதிக்கும் வெப்பம்... புலம்பெயர் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் வதைக்கும் கட்டார் | Qatar Migrant Workers Putting 14 Hour Shifts

@reuters

அதிகாலை 5 மணி முதல் மொதம் 14 மணி நேரம் உழைப்பதாகவும், ஒருமணி நேரம் உணவு இடைவேளை அளிக்கப்படுவதாகவும் அந்த இந்தியர் கூறியுள்ளார்.

உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், நாளுக்கு நாள் பார்வையாளர்கள் வருகையும் அதிகரித்து வருகிறது எனவும், தங்கும் விடுதிகள் மட்டும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல விடுதிகளில் கழிவறை அரைகுறையாக இருப்பதாகவும், தண்ணீர் குழாய்கள் சரிவர இயங்கவில்லை எனவும் விடுதிக்கு ஏற்கனவே பதிவு செய்துள்ள கால்பந்து ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.