கோயிலுக்கு போய் சர்ச்சையி்ல் சிக்கிய உதயநிதி… காரணம் இதுதான்!

கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய, திமுக இளைஞரணி செயலாளர்

இன்று அங்கு வருகை தந்திருந்தார். கோயிலின் பள்ளியறை வரை சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது சுவாமி தோப்பு தலைமை பதியில் காலங்காலமாக கடைபிடிக்கபட்டுவரும் தலைப்பாகை மற்றும் திருநாமத்தை இடாமல் உதயநிதி ஸ்டாலின் கோயிலுக்குள் சென்றார். ஆனால், அதேசமயம் அவருடன் சென்ற அமைச்சர்களும், மேயரும் தலைப்பாகை அணிந்து சென்றனர்.

இதனையடுத்து உதயநிதியின் இந்த செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது செயலுக்கு அய்யாவழி மத போதகர் ஶ்ரீ குரு சிவ சந்திர சுவாமிகள் கடும் கண்டனம் தெரவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கடவுளே இல்லை என்ற கொள்கையை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான ஒருவர் இந்த திருநடைக்கு வந்ததை நான் வரவேற்கின்றேன். ஆனால் அய்யா வழிக்கு என்று ஒரு நடைமுறையை உள்ளது. அதற்கு மாறாக பள்ளியறையில் தலையில் தலைப்பாகை அணியாமல் திருநாமம் இடாமல் பள்ளி அறைக்கு சென்றது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று கூறி உள்ளார்.

இதற்கு முகநூலில் மன்னிப்பு கேட்டு சாமிதோப்பு தலைமை பதி நிர்வாகி பால ஞனாதிபதி வெளியிட்டுள்ள பதிவில், ‘அய்யா வைகுண்டர் காலடி தொழுது எனது மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். நான் அழைக்கவில்லை; வருவதாக மேயர் தகவல் சொன்னார். நான் மகிழ்ச்சியுடன் வரவேற்றேன். சட்டையிடாமல் தலைப்பாகையுடன் வரவேண்டும் என்ற நிபந்தனையையும் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

அதனால் அவர்களின் வருகையை ஏற்றுக் கொண்டேன். ஐந்து நபர்கள் தான் உள்ளே வருவார்கள் என்றார்கள். ஏற்றுக் கொண்டேன். நெருக்கடி, தள்ளுமுள்ளுவில் தவறு நடந்துவிட்டது. அய்யா வைகுண்டர் தவறை பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை வழியில் வந்த திமுகவில் கருணாநிதி, தன் வாழ்நாளில் தீவிர நாத்திகத்தை பின்பற்றி வந்தார். அவரை தொடர்ந்து ஸ்டாலினும் தமது தந்தை வகுத்து கொடுத்த நாத்திக பாதையில் பயணித்து வருகிறார். ஆனால் அதேசமயம், ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர ஆத்திகவாதியாக தன்னை வெளிப்படுத்தி கொள்ள எப்போதும் தயங்கியதில்லை.

இதுகுறித்த விமர்சனங்களஅ எழும்போதெல்லாம் அது தனிமனித விருப்பம், சுதந்திரம் எனக் கோரி ஸ்டாலின் சமாளித்து வந்தார். ஆனால் ஆத்திகத்தை முன்னிறுத்தி தமிழகத்தில் பாஜக மெல்ல மெல்ல வளர்ந்து வருவதை உணர்ந்த ஸ்டாலின், திமுக ஆன்மிகத்துக்கு எதிரான கட்சி என்றொரு தவறான பிம்பத்தை கட்டமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் உண்மையில் திமுக ஆன்மிகத்துக்கு எதிரான கட்சி அல்ல என்று ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்திருந்தார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலின் தற்போது சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு சென்று சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.