தமிழக பாஜவில் தொடங்கிய பூசல்! காசி தமிழ் சங்கம விழாவில் புறக்கணிக்கப்பட்ட காயத்ரி ரகுராம் சீற்றம்

சென்னை: கட்டுக்கோப்பான கட்சி என்று சொல்லப்படும் பாஜகவிலும் உட்கட்சி பூசல்கள் பல மாநிலங்களில் வெளிப்பட்டு, பல எம்.எல்.ஏக்கள் நீக்கம், உறுப்பினர்கள் அதிரடி சஸ்பெண்ட் என்று அரசியல் பரபரப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது தான் தலையெடுத்துவரும் பாரதிய ஜனதா கட்சியில் நடந்துவரும் யுத்தத்திற்கு காயத்ரி ரகுராம் வெளிப்படையாக தொடங்கி வைத்துள்ளார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று நெட்டிசன்களும் இதை கலாய்த்து வருகின்னர்

தமிழக பாஜகவில், சீனியர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள், மூத்த நிர்வாகிகளை அவமதிக்கிறார்கள் என்று புகார் வைத்து வரும் காயத்ரி ரகுராம், ஒரு பெண்ணாக இருந்தும் தனக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கட்சியினர் சிலர் மோசமாக சித்தரிப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த மோதல், காசியில் நடைபெறும், ‘காசி தமிழ் சங்கமம்’ விழாவிற்கு காயத்ரி ரகுராமுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதால் வெளியில் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. காசி தமிழ் விழாவுக்கு தமிழ்நாட்டில் உள்ள மூத்த பாஜகவினர் சென்றாலும், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக பதவியில் இருக்கும் காயத்ரிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது அவரது மனக்குமுறலை அம்பலப்படுத்திவிட்டது.

வெளிமாநிலத்தில் நடக்கும் தமிழ் தொடர்பான நிகழ்வில் தன்னை அனுமதிக்காமல் அவமதிக்கும் நிலையில், இனி எதிர்காலத்தில் கட்சியில் தன்னுடைய நிலை என்ன? மதிப்பு இருக்குமா என்று காயத்ரி ரகுராம் நினைத்திருக்கிறார். இதன் அடிப்படையிலேயே, கட்சியில் மூத்தவர்களை மதிப்பது இல்லை என்றும் இது தவறான போக்கு என்றும், சமூக ஊடகங்களில் காயத்ரி ரகுராம் பதிவிட்டு வந்தார். 

ஆனால், அவர் எந்தப் பதிவிலுமே பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று அண்ணாமலை இந்த விவகாரத்தை விட்டுவிடட்வில்லை.

பாஜக ஆதரவு டிவிட்டர் பக்கம் ஒன்றில், காயத்ரி பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக விமர்சனம் செய்தது. அதில், தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி இருந்தா இரு இல்லானா மானாடமயிலாட போய் கொரியோகிராஃபர் வேலைய பாரு, என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இப்படி காயத்ரி ரகுராம் பெயர், சமூக ஊடகங்களில் வைரலாகும் நிலையில், தற்போது பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்?

இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் தமிழக பாஜகவில் பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு என்று மற்றுமொரு டிவிட்டர் செய்தியை போட்டிருக்கிறார்.இதையடுத்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்திற்குரியது! உடனடியாக ஊதிய உயர்வினை வழங்க வேண்டும் -சீமான்  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.