தேனி : கும்பக்கரை அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து, இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மழை பெய்ததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தேனி கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் நாளை முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.