பழனி: கோயில் அடிவார விடுதியில் தற்கொலை செய்துகொண்ட கேரள தம்பதி; போலீஸ் விசாரணை!

​கேரள மாநிலம், எர்ணாகுளம் பல்லுரித்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரகுராம் (46)​, ​உஷா (44) தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள​னர். இந்த ​நிலையில், நேற்று பழனிக்கு வந்த இருவரும் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, அடிவாரம் பகுதியிலுள்ள தனியார் தங்கும்​ ​விடுதியில் அறை எடுத்து தங்கினர்.​ ​நேற்று அறைக்குச் சென்றவர்கள் இன்று மாலை 5​ ​மணி ஆகியும்​ வெளியே வரவில்லை. 

கடிதம்

இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அடிவாரம் காவல்துறையினருக்குத் தகவல் ​கொடுத்தனர். இதையடுத்து விடுதிக்கு வந்த போலீ​ஸா​ர் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்​று பார்த்த​னர். அங்கு ரகுராம், உஷா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது‌. இதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

​மேலும், அந்த அறையிலிருந்து கடிதம் ஒன்றை போலீ​ஸா​ர் கைப்பற்றினர். அதில், ​`​சிறிய விஷயத்துக்காக ​நிம்மி, கீதா, ரேகா, உஷா, சுபா, ரமேஷ், ரமா உள்ளிட்ட ​10​ ​பேர் எங்களை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்ற​னர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை​ செய்துகொள்கிறோம். எங்கள் மரணத்துக்கு அந்த 10 பேர்தான் காரணம். கேரளாவில் உள்ள பா​.​ஜ​.​க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களுடைய மரணத்துக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும், நீதி கிடைக்க பாடுபட வேண்டும்” என அந்த​க்​ கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்கொலை

​இது குறித்து பழனி போலீஸாரிடம் விசாரித்தபோது, “கேரள தம்பதிக்கு என்ன பிரச்னை எனத் தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு பிரச்னை வழக்கு பதிவு வரை சென்றுள்ளது. பிறகு அந்த வழக்கு பிணையில்லா வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ​இதில் இருவரும் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளனர். கேரளாவில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு கடிதம் உட்பட நடந்தவற்றை தெரிவிக்கவிருக்கிறோம்” என்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.