5 வகை பாக்டீரியாக்கள் தாக்குதல் இந்தியாவில் 2019-ல் 6.8 லட்சம் பேர் பலி: மருத்துவ ஆய்வறிக்கையில் அதிர்ச்சி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டில் 5 பாக்டீரியாக்கள் தொடர்பான நோய்களால் 6.8 லட்சம் பேர் பலியானதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் வெளியாகும், ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில் கடந்த 2019ம் ஆண்டில் மாரடைப்புக்கு அடுத்தபடியாக பாக்டீரியாக்களால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு 77 லட்சம் மக்கள் 33 வகையான பொதுவான பாக்டீரியா நோய்களுக்கு பலியாகி உள்ளனர். இதில், இ கோலி, எஸ் நிமோனியா, கே நிமோனியா, எஸ் ஆரியஸ் ஏ பாவ்மன்னி ஆகிய 5 வகை பாக்டீரியாக்களால் மட்டுமே 38.5 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வகை 5 பாக்டீரியாக்களால் 2019ம் ஆண்டு 6.87 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதிலும் மிகவும் தீவிர நோய் தாக்கத்தை ஏற்படுத்தும், மரணத்தை விளைவிக்கும் கொடிய நோய் கிருமிகள் கொண்ட இ கோலி பாக்டீரியாவால் மட்டும் 1,57,082 பேர் பலியாகினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.