ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி… ஜப்பானிடம் 2-1 கோல்கணக்கில் தோல்வி

கத்தாரில் நடைபெற்றுவரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் ஜெர்மனி தோல்வி அடைந்தது.

நான்கு முறை உலககோப்பை வென்ற ஜெர்மன் அணியின் தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2014 ம் ஆண்டு கோப்பை வென்ற ஜெர்மனி 2018 ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலககோப்பை போட்டியில் மெக்சிகோ மற்றும் தென் கொரிய அணிகளிடம் தோல்வியடைந்து முதல் சுற்று ஆட்டத்திலேயே வெளியேறியது.

மீண்டும் உலககோப்பை வெல்லும் கனவுடன் களமிறங்கிய ஜெர்மனிக்கு இன்றைய தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபிய அணி தோற்கடித்தது இந்த வெற்றிக் கொண்டாட்டம் சவுதியில் இன்றும் ஓயாத நிலையில் இந்த உலககோப்பை தொடரில் மற்றொரு முன்னணி அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் நாளை பொது விடுமுறை… அர்ஜென்டினா அணியை வீழ்த்தியதை கொண்டாடுகிறது…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.