நாட்டின் அமைதி தான் முக்கியம் என்று.. ராணுவத்தை மேம்படுத்த தவறிவிட்டோம் – ஆளுநர் ரவி

சென்னை சாஸ்திரி பவனில் புதிதாக நிறுவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது பிரதமரும், சுதந்திர போராட்ட வீரருமான லால் பகதூர் சாஸ்திரியின் வெண்கல சிலையை ஆளுநர் ரவி திறந்து வைத்து உரையாற்றினார்.
இந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தார். ஆளுநர் பேசுகையில்,’ லால்பகதூர் சாஸ்திரியை பொறுத்தவரை எளிமைக்கு பெயர் பெற்றவர்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தாலும் தனது பொதுவாழ்வு கடமையில் தன்னை அர்பணித்தவர். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தாலும் தனது பொதுவாழ்வு கடமையில் தன்னை அர்பணித்தவர். இந்திய நாட்டுக்காக பல்வேறு பங்களிப்புகளை அளித்த இந்த தலைவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
“ஜெய் ஜவான், ஜெய் கிஷான்” முழக்கங்களை தந்தவர் . நமது நாட்டின் தேவைகள் தொடர்பாக தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர். நமது நாட்டின் மீதான பார்வையில் மாற்றம் கொண்டு வந்தவர் லால் பகதூர் சாஸ்திரி. நமது நாட்டின் தேவை உள்ளிட்டவைகளின் பார்வைகளில் மாற்றம் கொண்டு வந்தவர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது நமது நாடு அமைதி என்பதையே முதன்மையாக கருதியது, அமைதி வழியை கடை பிடித்தால் நம் நாடு பாதுகாப்பானதாக இருக்கும் என கருதினோம்.
image
இதனால் நமது நாட்டின் ராணுவத்துக்கு தேவையான விசயங்களை செய்யவில்லை, கருத்தில் கொள்ளவில்லை. அதனால் நாம் பல்வேறு பகுதிகளை இழந்தோம். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளை இழந்தோம், அதே போல் சியாச்சின் பகுதிகளில் பெரும்பாலானவையை இழந்தோம். மேலும் எதிரிகள் தொடர்ந்து நமது நாட்டின் பகுதிகளை தொடர்ந்து ஆக்கிரமித்து வந்தனர். ஆனாலும், நமது நாடு அமைதியை குறித்து பேசி வந்தது, ராணுவ பலத்தை மேம்படுத்தவில்லை.
இதனால் நமது நாடு 1962-ல் மிகவும் அவமானத்தை சந்தித்து. நமது அணிசேரா கொள்கை மற்றும் அமைதி வழிப்பாதை என்பது நமக்கு தேசிய அளவில் அவமானத்தையே தந்தது. மேலும் அந்த காலக்கட்டத்தில் நமது நாடு தன்னம்பிக்கையை இழந்தது. அதேபோல் உணவு பஞ்சமும் தலைவிரித்தாடியது. அந்த காலகட்டத்தில் உணவு தனியத்தின் தரமும் இல்லாத சூழல் ஏற்பட்டது, நமது நாடு நிலை குலைந்து நின்றது. இதனைதொடர்ந்து வந்த லால் பகதூர் சாஸ்திரி அனைத்தையும் மாற்றினார்.
image
நமது நாட்டின் பிராந்தியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அறிவித்தவர். எவரேனும் நம்மை தாக்க முற்பட்டால் நாமும் திருப்பி தாக்க வேண்டும் என்பதை முன்னெடுத்தவர். அவரது காலத்தில் தான் நமது ராணுவத்தின் செயல்பாடுகள் மேம்பட்டன, பலப்படுத்தப்பட்டன. சுதந்திரம் கிடைத்த பின்னர் முதன்முறையாக நமது ராணுவத்தின் மீதான மதிப்பு உலக அளவில் மேம்பட்டது என்றார். ஆளுநர் திறந்து வைத்த லால்பகதூர் சாஸ்திரி சிலையின் உயரம் 9.5 அடி, மொத்த எடை 850 கிலோ, மதிப்பு ரூ.15 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் – மாநில மகளிர் அணி முதல் இளைஞர் அணி வரை… திமுக-வில் யார் யார் என்னென்ன பொறுப்பில் நியமனம்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.