போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை: இலங்கை அரசு அதிரடி!

இலங்கை நாட்டில் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை நிறைவேற்றும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதாவது, போதைப் பொருள் வைத்திருப்பவர்களுக்கு சிறைத் தண்டனை, அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அண்டை நாடான இலங்கையில், போதைப் பொருள் வைத்திருந்தால் மரணத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப் பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

5 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!

இன்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல் துறை போதைப் பொருள் ஒழிப்பு துறை தெரிவித்து உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி, நச்சுப் பொருள், அபின், அபாயகர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்த மசோதாவில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.