நம்ம கட்சியிலேயே சனாதனம் இருக்கு தலைவரே… திருமா மேடையில் புயலை கிளப்பிய விசிக பெண் நிர்வாகி!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில், அக்கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவனின் மணி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில்,

மகளிர் அமைப்பு செயலாளர் நற்சோனை பேசிய விஷயம் தற்போது அக்கட்சியில் புயலை கிளப்பி உள்ளது.

விசிக மாவட்ட நிர்வாகிகள் கட்சியில் உள்ள பெண்களை கேவலமாக திட்டி பேசி வருகின்றனர். அவர்களது இந்த அநாகரிக பேச்சை எல்லாம் டேப் செய்து வைத்துள்ளேன். அவற்றை தலைவரிடம் காட்டவம் தயாராக இருக்கிறேன். ஆண் வர்க்கத்தினர் இன்னும் நிறைய திருந்த வேண்டி உள்ளது.

நாம் (விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்) சனாதனத்துக்கு எதிரானவரக்ள்தான். ஆனால் அதேசமயம் நம் கட்சியிலேயே சனாதனம் உள்ளது. கட்சியி்ல் அனைத்து நிலைகளிலும் டாப் டூ பாட்டம் வரை சனாதனம் உள்ளது என்று அந்த பெண் நிர்வாகி ஆவேசமாக பேசியதை கேட்டு மேடையில் வீற்றிருந்த

உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்ற ஒட்டுமொத்த சில நொடிகள் அரங்கமே அதிர்ச்சியி்ல் ஆழ்ந்தது.

சூழலை சுதாரித்துக் கொண்ட விழா ஏற்பாட்டாளர்கள், நற்சோனை பேசிக் கொண்டிருந்த மைக்கை டக்கென ஆஃப் செய்தனர். திருமாவளவனின் அறிவுறுத்தல் பேரில்தான் மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

களப்பணியில் நற்சோனை தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மேடையில் தைரியமாக பகிர்ந்துள்ளது பாராட்டத்தக்கது. முரண்பாடுகள் விவாதத்துக்கு வரும்போதுதான் அதற்கு தீர்வு காண முடியும் என்று நற்சோனையின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு அதே மேடையிலேயே கட்சியின் தலைவர் என்ற முறையில் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

அவரது இந்த பேச்சின் மூலம், தற்சேனையின் குற்றச்சாட்டுகள் குறி்த்து கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் தீவிர விசாரணை மேற்கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், ஹிந்து கடவுள்கள் குறித்து மிகவும் மோசமாக பேசி, அந்த மதத்தினரின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துள்ள தொல் திருமாவளவன், சனாதனம் குறித்தும் உரக்க பேசி வருகிறார்.

சனாதனத்தை வேரறுப்போம்; ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று மேடைக்கு மேடை முழங்கி திருமாவளவன் முழங்கி கொண்டிருக்க, அவரது கட்சிக்குள்ளேயே சனாதனம் இருப்பதாக பெண் நிர்வாகி ஒருவர் பகிரங்கமாக பேசி உள்ளது கட்சிக்குள் பெரும்புயலை கிளப்பி உள்ளது.

கூட்டணி கட்சியாக இருப்பதால், சனாதனம் குறித்து விிசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசி வருவதை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளாததும் ஹிந்துகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் திமுக ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி என்ற பிம்பத்தை சிலர் திட்டமிட்டு கட்டமைத்து வருகின்றனர். ஆனால் உண்மையில் திமுக அப்படி இல்லை என்று ஸ்டாலின் விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.