இந்தோனேஷிய நிலநடுக்கம்: பலி 310 ஆக உயர்வு; 24 பேர் மாயம்!

பூகோள அமைப்பு ரீதியாக ஜப்பானை போன்றே நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள நாடான இந்தோனேஷியாவிலும், நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்படாத வகையில் வீடுகளும், நிலநடுக்கம் ஏற்படும்போது பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என்பது குறித்த பயிற்சியையும் இந்தோனேஷிய அரசு அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தது. இந்தநிலையில், இந்தோனேஷியாவில் கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 310 பலியாகி உள்ளதா அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் கடந்த நவம்பர் 21ம் தேதி, 5.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள குடியிருப்புகள், கட்டடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை குலுங்கி இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி சுமார் 20 பேர் பலியானதாகவும், 300 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், இந்த பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமடங்கு உயர்ந்துருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் நிலவரப்படி 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தநிலையில், நேற்றும் இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை 271 ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள் எனவும் தகவல்கள் வெளியானது. மேலும் 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.

இந்நிலையில், நிலநடுக்க பகுதியில் தொடர்ந்து 5வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த வீடுகள், கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து, பொதுமக்களும் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ரூபி மனோகரன் இடை நீக்கத்திற்கு தடை; காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!

இடிந்து விழுந்த கான்கிரீட் மற்றும் வீடுகளின் கூரை ஓடுகளை அகற்ற, அகற்ற சடலங்களாக கிடப்பதை கண்டு மீட்பு படையினர் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்துள்ளனர். இதுவரை 300 க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் எனுவும் மீட்பு குழுவினர் கலக்கத்துடன் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் நிலநடுக்கத்தால் இதுவரை 310 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனாவில் மீண்டும் கொரோனா பூகம்பம்; பயண கட்டுப்பாடுகள் அமல்.!

இது குறித்து இந்தோனேஷியாவின் தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த திங்கள் கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்தால், கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 310 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.