சவுதி அரேபியாவில் பெய்த கனமழைக்கு இருவர் உயிரிழப்பு

ரியாத்,

மேற்கு சவூதி அரேபியாவின் கடலோர நகரமான ஜித்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மேலும், மழையால் விமானங்கள் தாமதமானது. பள்ளிகளையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. யாத்ரீகர்கள் மெக்காவை அடைவதற்குப் பயன்படுத்தும் சாலை, மழை தொடங்கியவுடன் மூடப்பட்டது.

ஜெட்டாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால மழை மற்றும் வெள்ளம் ஏற்படுகிறது. 2009 ஆம் ஆண்டு வெள்ளத்தில் 123 பேரும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 10 பேரும் கொல்லப்பட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.