ராகுல் பாதயாத்திரையில் கீழே விழுந்த மூத்த தலைவர்; மத்திய பிரதேசத்தில் பரபரப்பு.!

வருகிற 2024ம் ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அக்கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி.

தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை, கேரளா, கர்நாடகா வழியாக காஷ்மீர் வரையில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்ட போது, சாவர்க்கரை குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமல்லாது, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாகரேயின் சிவசேனா கட்சியினரும், ராகுல் காந்தியின் சாவர்க்கர் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ராகுல் காந்தி தனது கருத்தில் இருந்து பின் வாங்கவில்லை. அவரது கருத்துக்கு காந்தியின் பேரன் ஆதரவு தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் ராகுல் காந்தியின் பாத்யாத்திரை பேசு பொருளாகியுள்ளது. இந்தநிலையில் ராகுல்காந்தி தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபயணம் செய்துவருகிறார். இதில் மத்திய பிரதேசத்தின் முன்னால் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கலந்து கொண்டார்.

இந்தநிலையில் மத்திய பிரதேசத்தின் கார்கன் மாவட்டத்தில் உள்ள பர்வஹா பகுதிக்கு பாதயாத்திரை வந்து கொண்டிருந்த போது, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அருகில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரை உடனடியாக மீட்டதால், அவருக்கு காயம் ஏதுமில்லை. இந்த சம்பவம் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் சாலை வசதி முறையாக பராமரிக்கப்படாததால், பாதயாத்திரையில் திக்விஜய சிங் நான்கு முறை கீழே விழுந்துள்ளார் என காங்கிரஸ் ஊடக பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், ஆளுங்கட்சியினரை குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

டிஆர்எஸ் எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கு; பாஜக தலைவரை விசாரிக்க தடை.!

மத்திய பிரதேசத்தின் சாலைகள், அமெரிக்க சாலைகளுக்கு ஒப்பானவை என முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் முன்பு கூறியிருந்தார். அதை மேற்கோள் காட்டிய ஜெய்ராம் ரமேஷ், இங்கு சாலைகள் கொலைகார சாலைகளாக உள்ளன. அமெரிக்க சாலைகளுக்கு இணையானவை எனக்கூறப்பட்டும் இந்த சாலைகளில் நான் மூன்று முறை கீழே விழப்பார்த்தேன் என ஜெய்ராம் ரமேஷ் காட்டமாக கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.