அமைச்சராகும் உதயநிதி? கோடிட்டு காட்டிய திமுக அமைச்சர்!

ரிப்போர்ட் கார்டு:
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் தற்போது மொத்தம் 33 அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் தனித்தனியே ரகசியமாக கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்துள்ளார். இந்த குழு அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வருக்கு மாதந்தோறும் ரிப்போர்ட் கார்டு தந்து வருகிறது.

ஊழல் புகாருக்கு ஆளாகும் அமைச்சர்கள், நிர்வாக திறன் இல்லாமல் செயல்பட்டு வருபவர்கள், கட்சியின் உட்கட்சி பூசலுக்கு காரணமாக இருப்பவர்கள் என்று லிஸ்ட் போட்டு அமைச்சர்கள் குறித்த மாதாந்திர அறி்க்கை முதல்வரின் பார்வைக்கு தொடர்நது போய் கொண்டிருக்கிறதாம். இத்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை மிகவும் தீவிரமாக கருத்தில் கொண்டுவரும் முதல்வர், ரிப்போர்ட் கார்டிஸ் அடிப்படும் அமைச்சர்களுக்கு அவ்வபோது வார்னிங் அளித்து வருவதாகவும் தெரிகிறது.

மூன்று காரணங்கள்:
இதன் தொடர்ச்சியாக, தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்றொரு தகவல் கோட்டை வட்டாரத்தில் கடந்த சில மாதங்களே உலவி கொண்டிருக்கிறது. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்படவி்ல்லை. இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்ற தகவல் மீண்டும் கோட்டை வட்டாரத்தில் ரெக்கை கட்டி பறக்க தொடங்கி உள்ளது.

ஊழல் புகார், உட்கட்சி பூசல் ஆகிய காரணங்களுக்காக சில அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்றும், நிர்வாக ரீதியாக திறன்பட செயல்படாத சில அமைச்சர்களின் இலாகா மாற்றப்படலாம் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சராகும் உதயநிதி?:
இந்த முறை முக்கியமாக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. அவருடன் திமுகவில் உள்ள பெண் எம்எல்ஏக்கள் மற்றும் இளைஞர்கள் சிவருக்கும் அமைச்சர் பதவி கொடுத்து புதுரத்தத்தை பாய்ச்சவும் முதல்வர் முடிவு செய்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை ஆமோதிக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது குறித்து முதல்வர் முடிவடுப்பார் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதனிடையே உதயநிதி அமைச்சரா, துணை முதல்வரா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்கின்றனர் விவரம் அறிந்த திமுக உடன்பிறப்புகள் சிலர்.

அம்மாவின் ஆசை:
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆன நாள் முதல் அவர், தமிிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்து வருகின்றன. இந்த தகவலுக்கு தூபம் போடும் விதத்தில் உதயநிதியின் நெருங்கிய நண்பரும், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்புக்கு வர வேண்டும் என்று அவ்வபோது கூறி வருகிறார்.

இவரது இந்த கருத்தை ஆமோதிக்கும் விதமாக அமைச்சர் சிவசங்கரன் உள்ளிட்டோரும் உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து பொதுவெளியில் அவ்வபோது பேசி வருகின்றனர். அவரை அமைச்சராக்கி பார்த்தே ஆக வேண்டும் என்பதில் துர்கா ஸ்டாலின் தீவிரமாக இருப்பதாகவும் அவ்வபோது தகவல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.