உடல் ஆரோக்கியம், விளையாட்டுகளில் சாதிக்க குழந்தைகளுக்கான கூடம்!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகர் முழுவதையும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி குளக்கரைகளில் நடைபாதைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் உணவகங்கள் அமைக்கப்பட்டன. 

இதற்கிடையில் கோவையில் துவங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சி மையம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தற்போது உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பல்வேறு விளையாட்டுகளில் சாதிக்க மாணவ,மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் கோவை வடவள்ளி பகுதியில் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.

க்ரீன் நெஸ்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழாவை முன்னிட்டு,டேலண்ட் ஆப் வடவள்ளி எனும் பன்முக திறன் போட்டி நடைபெற்றது.இதில்,குழந்தைகளுக்கான ஓவிய போட்டிகள்,மற்றும் தனிப்பாடல்,நடனம் போன்ற போட்டிகள் நடைபெற்றது. 

இதே போல விளையாட்டு வீர்ர்களும் கலந்து கொண்ட டென்னிஸ் போட்டிகளும் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீர்ர்களுக்கு க்ரீன் நெஸ்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவர் கோபால் மற்றும் நிர்வாக இயக்குனர் ராதா ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.

இதற்கிடையில் கோவையில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்கா, உடற்பயிற்சி கூடம்,மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதைகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.