சீனாவின் மாஜி அதிபர் ஜியாங் ஜமீன் மரணம்| Dinamalar

பீஜிங், சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜமீன், 96, நேற்று காலமானார்.

ஷாங்காய் நகரில் சோப்புத் தொழிற்சாலை மேலாளராக இருந்த ஜியாங், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, அதில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக 1989 – 2004 வரை பதவி வகித்த ஜியாங், 1993 – 2003 வரை சீன அதிபர் பதவியையும் வகித்தார்.

சீனாவின் தியனன்மென் சதுக்கத்தில், 1989ல் நடந்த மிகப்பெரிய போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் போராட்டம் ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது.

உலக அளவில் கவனம் பெற்ற இந்தப் போராட்டத்துக்குப் பின், தலைமை பதவி ஏற்ற ஜியாங், கட்சியை திறம்பட வழிநடத்தினார். இதேபோல், 93ல் இருந்து அதிபராக இருந்த காலகட்டத்திலும், அவர் உலக அளவில் சீனாவை வலிமை மிக்க நாடாக்கும் இலக்கை நோக்கி சென்றார்.

வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த ஜியாங் ஜமீன், ஷாங்காய் நகரில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு, சீன அதிபர் ஜின்பிங் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.