பயங்கர குண்டு வீச்சு கொடூரன் களமிறங்கினான்: உக்ரைன் போரில் புடினின் மோசமான திட்டம்


உக்ரைன் உடனான போர் தாக்குதலில் ரஷ்ய படைகளுக்கு மேலும் வலுசேர்ப்பதற்காக உலகின் மிக மோசமான குண்டுவீச்சு விமானத்தை ரஷ்ய துருப்புகளுக்கு ஜனாதிபதி புடின் வழங்கியுள்ளார்.

விடாமல் தொடரும் போர் 

உக்ரைன் போரில் ரஷ்ய ஜனாதிபதி புடின் படைகள் தொடர்ந்து பின்வாங்குதலை சந்தித்து வந்தாலும், தனது படையெடுப்பை குறைக்கும் அறிகுறியை இதுவரை ரஷ்யா வெளிக்காட்டவில்லை.

போரில் இறந்த மற்றும் காயம்பட்ட வீரர்களுக்கு மாற்றாக தொடர்ந்து அடுத்தடுத்த படைக்குழுகளை எவ்வாறு மீண்டும் திரட்டுவது என்றே ரஷ்யா திட்டமிட்டு வருகிறது.

Vladimir Putin- விளாடிமிர் புடின்(Shutterstock)Vladimir Putin- 
விளாடிமிர் புடின்(Shutterstock)

சமீபத்தில் மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நோட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், உக்ரைன் போர் நடவடிக்கையானது ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் என எச்சரித்து இருந்தார்.


மீண்டும் வரான் Tu-22M3

உக்ரைன் போர் 9 மாதங்கள் ஆகியும் தொடர்ந்து நீடித்து வருவதுடன் ரஷ்யா பின்னடைவை தொடர்ந்து சந்தித்து வருவதால், உலகின் மிக மோசமான குண்டுவீச்சு விமானமான Tu-22M3 ரக போர் விமானங்களை ரஷ்ய படைகளுக்கு புடின் வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகளின் படி இந்த Tu-22M3 மாக் 2.05 இன் உயர் வேகத்தை கொண்டுள்ளது. இவை பல ஹைபர்சோனிக் ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது, மேலும் இவை அதிக துல்லியத்திற்கான வெடிகுண்டு விநியோக அலகுகளையும் கொண்டுள்ளது.

Tu-22M3 missile-carrying bomber - Tu-22M3 ஏவுகணை சுமந்து செல்லும் குண்டுவீச்சு விமானம்(Image: Alexander Ryumin/TASS)Tu-22M3 missile-carrying bomber – Tu-22M3 ஏவுகணை சுமந்து செல்லும் குண்டுவீச்சு விமானம்(TASS)

Tupolev விமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் மீண்டும் தயாரிக்கப்படாது என கருதப்பட்ட நிலையில், உக்ரைன் போரின் போது  நாட்டின் கொள்முதல் திட்டம் மாற்றப்பட்டது என்று TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பழைய போர் விமான மாடல் Tu-22M3, தற்போது பழுது பார்க்கப்பட்டு போருக்காக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், 500 எண்ணிக்கையிலான Tu-22M3 குண்டுதாரி போர் விமானங்கள் பழுது பார்க்கப்பட்டு உக்ரைன் போரில் ரஷ்ய படையினருக்கு வழங்கபட இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

Tu-22M3 missile-carrying bomber - Tu-22M3 ஏவுகணை சுமந்து செல்லும் குண்டுவீச்சு விமானம்(Getty Images)Tu-22M3 missile-carrying bomber – Tu-22M3 ஏவுகணை சுமந்து செல்லும் குண்டுவீச்சு விமானம்(Getty Images)

ரஷ்ய செய்தித் தொடர்பாளர் தெரிவித்த தகவலில் துபோலேவ் விமான நிறுவனம் சமீபத்திய Tu-22M3 ஏவுகணை தாங்கி குண்டுவீச்சு விமானத்தை ரஷ்ய விண்வெளிப் படைகளின் நீண்ட தூர விமானப் போக்குவரத்துக்கு பாதுகாப்பு கொள்முதல் திட்டத்தின் கீழ் பழுது பார்ப்பதற்காக வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.