முறையான திட்டமிடலின்றி அபிவிருத்தித் திட்டங்கள் – பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது

முறையான திட்டமிடலின்றி அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 ⏩ முறையான திட்டமிடலின்றி அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்குவதால் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது..

 
⏩ அதுவும் இன்று கட்டுமானத் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம்… 
 
⏩ அபிவிருத்தித் திட்டங்களை விட பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே வரவு செலவுத் திட்டத்தின் முதன்மையான கவனம்… 
 
⏩ ஆனால் நாம் அத்தியாவசியமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்…
 
 இவ்வாறான தன்னிச்சையான நடவடிக்கைகள் தற்போது நிர்மாணத்துறையின் வீழ்ச்சியை வெகுவாகப் பாதித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வரவு செலவுத்திட்டம் மற்றும் எதிர்கால பணிகள் தொடர்பாக அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:
நாட்டில் நிலவும் பிரச்சினைகளை ஓரளவுக்கு நிர்வகிப்பதன் மூலம் அரசாங்கம் தலை தூக்கிக் கொண்டு வருகின்றது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த விரும்புவதால், புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஆரம்பத்தை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அபிவிருத்தி திட்டங்களை விட பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாம் அத்தியாவசியமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். சில சமயங்களில் அதற்கு தனியார் துறையையும்  இணைத்துக் கொள்ள வேண்விரும்புகிறோம்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை எப்படி சரியாக நிர்வகிப்பது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே, புதிய திட்டங்களைத் தொடங்கும் முன், அரச  நிறுவனங்கள், நாட்டின் நிலை, எந்த அளவுக்குத் திட்டம் தேவை என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
இல்லை என்றால் இந்த அமைச்சுக்களில் முதல்  இருந்தவர்கள் போல் நாமும் சிக்கலுக்கு ஆளாக நேரிடும்.
கடந்த காலத்தில் இந்த அமைச்சுப் பொறுப்பில் இருந்த தலைவர்கள், எதிர்காலத்தில் நாட்டைக் பொறுப்பேற்கப் போகும் தலைவர்கள் தாம் விரும்பியவாறு செயற்பட்டதால் மக்களால் நான் விமர்சனம் கேட்க  வேண்டியவர் ஆனேன். நான் மக்களின் அழுத்தத்திற்கு உள்ளான நிலையிலேயே நான் வேலை செய்ய வேண்டியுள்ளது.
இந்த அமைச்சினால் நாட்டின் அபிவிருத்திக்கான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி அவதானம் செலுத்தி வருகின்றார். எனவே, எல்லாவற்றையும் மிகவும் ஒழுங்காகவும், முறையாகவும் செய்ய வேண்டும்.
மேலும், நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு அமைச்சின் கீழ் செயல்படும் பிற நிறுவனங்களில் இருந்து தகுதியான  பணியாளர்களை நியமிக்கவும்.
சும்மா வேலையாட்களை நியமித்து, நிறுவனங்களுக்கு மூளையை நிரப்புவதில் அர்த்தமில்லை.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்தா மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.