வவுனியா,பொலநறுவை பிரதேச நெல் களஞ்சியசாலைகளை நவீனமயப்படுத்த நிதி

2023 ஆம் ஆண்டில் 8000 மெற்றிக் தொன் அரிசியை கையிருப்பில் பேணுவதற்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக அரிசி கையிருப்பைப் பாதுகாக்கத் தேவையான வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

வெகுஜன ஊடக அமைச்சுஇ வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் இணைந்து நேற்று (29) நடத்திய ஜூம் zoom செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அடுத்த வருடத்தில் ,ஆலை உரிமையாளர்களுக்கு ஐந்து கோடி ரூபா பெறுமதியான கடன் உதவியும் வழங்கப்பட இருக்கின்றது.
இதற்கான நடவடிக்கை  மாவட்ட மட்டத்தில் அரிசியை உற்பத்தி செய்யும் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
ஹிங்குரான்கொட, பொலநறுவை, வவுனியா  ஆகிய பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகள் நவீனமயப்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கென,இரண்டு கோடி 50 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் பற்றிய முகாமைத்துவக்
கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கென ஒரு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.