16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி.!

இது குறித்து தமிழக தலைமை செயாலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிக்கை: உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிர்வாக இயக்குனராக இருந்த ஜெயசீலன் மாற்றம் செய்யப்பட்டு, அந்த பொறுப்பிற்கு ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மேலும் வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராக அபூர்வா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக இயக்குனராக இருந்த நந்தகோபால், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீட்டுவசதித்துறை செயலாளராக இருந்த ஹிதேஸ்குமார் மக்வானா டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பட்டாளர் கிரண் குராலா, பேரூராட்சிகள் இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார். வீட்டுவசதி வாரிய இயக்குனராக இருந்து வந்த ஜதாக், சமூக நலம் பெண்கள் நல வாரிய இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார். வேளாண் மற்றும் விவசாயிகள்நலத்துறை இயக்குனராக இருந்த ஆபிரகாம், சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நகர்புற மேம்பாட்டு இயக்குனராக இருந்த செல்வராஜ், தமிழ்த்துறை மேம்பாடு மற்றும் தகவல் துறை இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார். அதேபோல் சாலை மேம்பாட்டுதுறை திட்டம் -2-ல் இயக்குனராக இருந்த கணேசன் நகர்புற ஊரமைப்பு இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சாலையில் பாலம் ஒரு பகுதியாக கீழே இறங்கியதால் அதிர்ச்சி

பிற்பட்டோர் நலத்துறை இயக்குனராக இருந்த அனில்மேஸ்ராம், பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார். பிற்பட்டோர் நலத்துறை இயக்குனராக இருந்த அனில்மேஸ்ராம், பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார்.

நகர் புனரமைப்பு திட்டம் இயக்குனராக இருந்த சரவண வேல்ராஜ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். அதேபோல் தொழில்துறை சிறப்பு செயலாளராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மருத்துவதுறை பயிற்சி வாரியத்தில் இருந்து வந்த பூங்கோடி சாகோசர்வ்நிர்வாக இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்’’ என தலைமை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.