Digital Rupee: இந்தியாவின் டிஜிட்டல் நாணயம் பற்றி முழு விவரம்!

ரிசர்வ் வங்கி இந்தியாவில் அதன் டிஜிட்டல் ரூபாய் பணத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிஜிட்டல் பணம் வாங்குவதற்கும் செலுத்துவதற்கும் குறிப்பிட்ட சில வங்கிகளில் சில நகரங்களில் கிடைக்கும். இந்த டிஜிட்டல் நாணயம் குறித்து முழு தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

இது கிரிப்டோ நாணயம் கிடையாது

பலர் இதை கிரிப்டோ நாணயம் என்று நினைத்துக்கொண்டுள்ளார்கள். இது நாம் தினசரி பயன்படுத்தும் நாணயத்தின் அதே மதிப்பை கொண்டது. ஆனால் டிஜிட்டல் முறையில் இருக்கும். இதை நாம் செலவிற்கும் வரவிற்கும் இனி கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

எங்கு இதை வாங்கலாம்?

முதல்கட்டமாக இந்த
டிஜிட்டல் ரூபாய் இந்தியாவின்
முன்னணி வங்கிகளாக இருக்கும்
State Bank of India, ICICI bank, IDFC First Bank, Yes Bank
ஆகிய வங்கிகளில் கிடைக்கும். பின்னர் இதேபோல அடுத்தகட்டமாகா
Bank of baroda, union bank, HDFC Bank, Kotak mahindra Bank
ஆகிய வங்கிகளிலும் கிடைக்கும்.

ஆனால் அதிலும் முதல்கட்டமாக
மும்பை, புது டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர்
ஆகிய நகரங்களில் மட்டுமே தற்போது கிடைக்கும். பின்னர் அகமதாபாத், லக்னோ, ஐதராபாத், இண்டோர், கேங்டாக், கவுகாத்தி, கொச்சி, பாட்னா, சிம்லா ஆகிய நகரங்களில் அடுத்தகட்டமாக அறிவிக்கப்படும்.

எப்படி வாங்குவது?

இந்த டிஜிட்டல் ரூபாய் நாம் அதிகாரபூர்வ App அல்லது இணையத்தளத்தில் வாங்கலாம். இது பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதை நமது
Bank Wallet
கொண்டு பயன்படுத்தலாம்.

மற்றவர்களுக்கு பகிர முடியுமா?

நிச்சயமாக நாம் இந்தியா நமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பகிரமுடியும். இதை நமது Wallet போன்றவற்றில் சேமித்துக்கொள்ளலாம். இதை தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் என்று RBI தெரிவித்துள்ளது.

ரூபாய் vs டிஜிட்டல் ரூபாய் என்ன வித்யாசம்?

இரண்டிற்கும் ஒரே மதிப்பு உள்ளது. இதை நாம் நமது வங்கிகளுக்கு சென்று கையில் பணமாகவோ அல்லது கையில் உள்ள பணத்தை டிஜிட்டல் பணமாகவோ மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த டிஜிட்டல் பணத்திற்கு வங்கி எந்த ஒரு வட்டியும் தராது. சராசரி பணத்திற்கு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி தரும். இதற்கு கிடைக்காது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.