பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படுவார்… மன்னர் சார்லஸ் முடிவு அது: இறுகும் ஹரி விவகாரம்


இளவரசர் ஹரி வெளியிடவிருக்கும் தமது புத்தகத்தில் கமிலா தொடர்பில் தவறான தகவல் ஏதேனும் குறிப்பிடப்பட்டிருந்தால், மன்னர் சாலஸ் தகுந்த நடவடிக்கை முன்னெடுப்பார் என ராஜகுடும்பத்து விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னர் சார்லஸ் பொறுத்துக்கொள்வார்

எதிர்வரும் 10ம் திகதி இளவரசர் ஹரி தமது 416 பக்க புத்தகத்தை வெளியிடவிருக்கிறார்.
குறித்த புத்தகம் தொடர்பில் ராஜகுடும்பத்து மூத்த உறுப்பினர்கள் தங்கள் தரப்பில் உரிய பதிலளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படுவார்... மன்னர் சார்லஸ் முடிவு அது: இறுகும் ஹரி விவகாரம் | Harry Criticises Camilla King Charles Close

@getty

இருப்பினும், ஹரி மீதான பாசம் காரணமாக மன்னர் சார்லஸ் ஒரு எல்லை வரையில், அனைத்தையும் பொறுத்துக்கொள்வார் என்றே சிலர் நம்புகின்றனர்.
ஆனால், கமிலா தொடர்பில் வரைமுறையில்லாமல் ஹரி தமது புத்தகத்தில் வெளிப்படையாக பேசியிருந்தால், அது அவருக்கே சிக்கலாக மாறலாம் எனவும், ராஜகுடும்பத்தில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்படலாம் எனவும் கூறுகின்றனர்.

கமிலா மீதான விமர்சனங்கள்

கமிலா தொடர்பில் இனிமேலும், எவரும் விமர்சிப்பதை சார்லஸ் விரும்பவில்லை எனவும், ஒரு வரைமுறை கண்டிப்பாக தேவை எனவும் சார்லஸ் கருதுகிறார்.
தமது மகன் மீது அளவு கடந்த பாசம் இருந்தாலும், கமிலா மீதான கடுமையான விமர்சனங்களை அவர் பொறுத்துக்கொள்ள வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.

தமது தாயாரை சார்லஸ் விவாகரத்து செய்ய கமிலா தான் காரணம் எனவும், இளவரசி டயானா அப்பழுக்கற்ற ஆள் தெய்வம் என ஹரி கொண்டாடுவார் என்றால், அது அவருக்கு அவரே வைத்துக்கொள்ளும் உலை என்றே ராஜகுடும்பத்து விசுவாசிகள் கூறுகின்றனர்.

ராஜகுடும்பத்து பட்டங்கள் அனைத்தையும்

இதற்கு பதிலாக, தவறு செய்துவிட்டீர்கள், உங்கள் விருப்பம் போல வாழ முடிவும் செய்துவிட்டீர்கள், ஆனால் ராஜகுடும்பத்து பட்டங்கள் அனைத்தையும் துறந்துவிட்டு செல்லுங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்படாலம் என கூறப்படுகிறது.

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படுவார்... மன்னர் சார்லஸ் முடிவு அது: இறுகும் ஹரி விவகாரம் | Harry Criticises Camilla King Charles Close

@PA

ராணியார் இல்லாத நிலையில், இனி மன்னர் சார்லஸ் மற்றும் பட்டத்து இளவரசர் வில்லியம் ஆகியோரின் முடிவே இறுதியாக இருக்கும்.
ஏற்கனவே, ஆவணப்படம் தொடர்பான முதல்பார்வை வெளியாகி ஹரி மற்றும் இளவரசர் வில்லியம் இனி ஒருபோதும் இணையும் வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்துள்ளது.

ராஜகுடும்பத்தை கருத்தில் கொண்டு, கருத்துவேறுபாடுகளை இருவரும் ஒதுக்கி வைப்பார்கள் என்ற நம்பிக்கை மூத்த உறுப்பினர்களுக்கு வேகமாக இழந்து வருவதாகவே கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.