ஆதாருடன் மின் இணைப்பு எண் சேர்ப்பு… நுகர்வோருக்கு வாரியம் சொன்ன அசத்தல் அப்டேட்!

பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றின் வரிசையில் தற்போது நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

அரசின் இந்த அறிவிப்பை அடுத்து, குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யவே மின் இணைப்பு எண்ணுடன் -ஆதாரை இணைக்க, நுகர்வோருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் இந்த பணியை மேற்கொள்ளாவிட்டால் அதன் பிறகு நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த முடியாது என்பன போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டு தீ போல பரவியது.

இதனால் மின் நுகர்வோர் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி இருந்தனர். இவர்களின் குழப்பத்தை தீர்க்கும் விதத்தில் ‘மின்சாரத் துறையை சீர்த்திருத்தம் செய்ய ஆதார் எண் இணைப்பது அவசியம். அதேசமயம் இதனை இணைக்க நுகர்வோருக்கு உரிய கால அவகாசம் அளிக்கப்படும் எனவும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காவி்ட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாது என்பது வதந்தி. இந்த வதந்தியை பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் விளக்கம் அளித்திருந்தார்.

அமைச்சரின் விளக்கத்தை அடுத்து, மின் இணைப்பு -ஆதார் எண் இணைப்பு பணியில் நுகர்வோர் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்களிலும், ஆன்லைன் மூலமும் அவர்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் சுமார் 2.3 கோடி மின் இணைப்புகள் உள்ள நிலையில், இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களி்ன் மின் இணைப்பை ஆதாருடன் இணைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஒரே நேரத்தில் பலர் முயன்றதால் கணினி சர்வரில் ஏற்பட்ட பிரச்னை, ஆன்லைனில் ஆதார் கார்டு நகலை பதிவேற்றும் செய்வதில் சிக்கல் போன்றவற்றால் நுகர்வோர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.

பொதுமக்களின் இத்தகைய சிரமங்களை கருத்தில் கொண்டு ஆதார்- மின் இணைப்பு நடைமுறையை மின் வாரியம் தற்போது எளிமையாக்கி உள்ளது. இதன்படி, மின் இணைப்பு – ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும்போது நுகர்வோர் இனி தங்களின் ஆதார் நகலை பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக ஆதார் எண்ணை மட்டும் பதிவிட்டால் போதுமானது.

இதன் பயனாக, https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற லிங்க்கை பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களிலேயே பொதுமக்கள் ஆதார்- மின் இணைபபு பணியை எளிதில் முடிக்கலாம் என்று தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.