போதையில் சேற்றில் புரண்டு போராட்டம் நடத்திய இளைஞர்!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கொல்லாபுரத்தில் இருந்து சங்கமங்கலம் செல்லும் சாலையில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அந்த சாலையின் குறுக்கே வாய்க்கால் செல்வதால் அதற்கான பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்ததால் அந்த இடம் சேரும் சகதியுமாக மாறியது. இதனால் விபத்து ஏற்படுவதகாவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் சேரும், சகதியுமான அந்த சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் ஒரு மணி நேரம் தொடர்ந்தததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலையின் இரு பக்கமும் இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தும் ஒரு மணி நேரம் வரை காவல்துறையினர் அந்த பகுதிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.