EWS Reservation : 10% இடஒதுக்கீடு தீர்ப்பின் மீது உச்ச நீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு தாக்கல்

அரசு வேலைகளில் முற்பட்டவகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவ. 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதபதி யூயூ லலித் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நடத்திய விசாரணையில், 3 பேர் 10 சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என்றும், அதற்கு எதிராக இருவரும் தெரிவித்திருந்தனர். நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 50 சதவீத இடஒதுக்கீடு என்ற வரம்பை இந்த முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மீறும் என்பதை காரணமாக வைத்து அதற்கு ஆதரவு அளிக்க மறுத்தனர். 

இருப்பினும், மீதமிருந்த மூவரும் 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனக்கூறி அதற்கு ஆதரவு தெரிவித்ததால், அந்த இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என தீர்ப்பானது. 

2019ஆம் ஆண்டு மத்திய அரசு இந்த ஒடஒதுக்கீட்டை வைத்து, கொண்ட வந்த சட்ட திருத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகளின்கீழ் நவ. 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தில் நவ. 7ஆம் தேதி தீர்ப்பை பல்வேறு தரப்பினர் கேள்விக்குட்படுத்தினர். குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நடந்த ஆலோசையின்படி, இந்த விவகாரம் குறித்து சீராய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருந்தது. அந்த கூட்டத்தில், அதிமுக, பாஜக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில், முற்பட்ட சமூகத்தினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மத்திய அரசின் முடிவை உறுதி செய்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது என தெரிவிக்கப்பட்டது. 10 சதவீத இடஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பால் 133 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாக திமுகவின் சீராய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உயர் சாதியினருக்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியே! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.