ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும்: அனுராக் தாக்கூர்

சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள அக்னி தொழில்நுட்ப  கல்லூரியில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில் ட்ரோன் திறன் மற்றும் பயிற்சி மாநாடு  மற்றும் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உள்ள ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தும் “கருடா கிசான்” எனும் ட்ரோன்களின் நிகழ்வை கண்டுகளித்தார். அப்பொழுது பரந்து வந்த ட்ரோன் மூலமாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அப்போது தொடர்ந்து மேடையில் பேசிய அனுராக் சிங், நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது,உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் உள்ளது என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:

கொரோனா காலகட்டத்தில் ட்ரோன் எவ்வளவு உதவியாக இருந்தது என நாம் பார்த்தோம், ட்ரோன்கள் தற்போது வேளாண் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மிக பெரிய அளவில் அவை உதவியாக உள்ளதால் பிரதமர் அரசு திட்டங்களை அவற்றை சேர்த்துள்ளார். 2014ஆம் ஆண்டு MAKE IN INDIA திட்டம் குறித்து பிரதமர் பேசும்போது இது சாத்தியமா என கேள்வி எழுப்பினார்கள் இன்று 2022ஆம் ஆண்டு இந்தியாவின் இளைஞர்கள் அவற்றை சாத்தியபடுத்தி வருகின்றனர் என்றார்.

வேளாண்துறையில் தொடர்ச்சியாக அறிவியல் வளர்ச்சிகளை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, ஹிமாச்சல பிரதேசம் போன்ற மலை உள்ள பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்துவது மிகவும் உதவியாக உள்ளது இருப்பினும் ட்ரோன் மூலம் அதிவேகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை வெளியே கொண்டு செல்ல கண்டுபிடிப்புகள் வர வேண்டும்.

விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக அதிகரிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வஜ்ரா ட்ரோன் உலகமே இந்தியாவை திரும்ப பார்க்கும் அளவில் செய்துள்ளது. ட்ரோன் தொழில் நுட்பத்தால் கருடா ட்ரோன் 1 லட்சம் பைலட்டுகள் தற்போது சேவையில் உள்ளது. விவசாயிகளுக்கு ஏற்றவாறு தொழில் நுட்பத்தை தமிழகம் மற்றும் ஹரியானா பகுதிகளில் அமைத்துள்ளது.

அனைத்து நாடுகளும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கருடா ட்ரோன் இன்னும் 2 வருடங்களும் 1 லட்சம் மேக் இன் இந்தியா ட்ரோன் திட்டத்தை அறிமுகப்படுத்தி இந்தியா விற்பனை செய்ய உள்ளது. 

இன்னும் 2 வருடங்கள் ட்ரோன் டெக்னாலஜி மூலமாக தொழில் நுட்ப வளர்ச்சியில் இந்தியா இன்னும் 5 வருடங்களில் பேரும் பங்கு வகிக்கும்.உலக அளவில் மிகப் பெரிய இடத்தில் இந்தியாவில் தொழில் நுட்பம் விளங்க உள்ளது. டோனியின் ஹெலிகாப்டர் சாட் பந்து காற்றில் பறப்பதை பார்த்துள்ளேன். ஆனால் ட்ரோன் காற்றில் பறப்பது அது போன்று உள்ளது என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.