'நிதியுதவியே பயங்கரவாதத்தின் உயிர்நாடி' – பாதுகாப்பு செயலர் அஜித் தோவல்

பயங்கரவாத அமைப்பிற்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் வலியுறுத்தி உள்ளார்.

கஜகஸ்தான், கிரிகிஸ்தான், தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை சேர்ந்த தேசிய

பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்கள் ஆகியோருடன் தேசிய

பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். துருக்மெனிஸ்தான் சார்பில்,

அந்நாட்டிற்கான இந்திய தூதர் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் பேசியதாவது:

இந்தியாவின் கவலைகள் மற்றும் இலக்குகள் மற்றும் முன்னுரிமை ஆகியவையே, இந்த கூட்டத்தில் உள்ள நாடுகளும் கொண்டுள்ளன. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இந்த பிராந்தியத்தில் பயங்கரவாத குழுக்கள் இருப்பது மிகவும் கவலைக்குரியது.

நிதியுதவியே, பயங்கரவாதத்திற்கு உயிர்நாடியாக உள்ளது. அதனையும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதையும் முக்கிய நோக்கமாக வைத்திருக்க வேண்டும். பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடமையை நிறைவேற்றவும், பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களை குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். மத்திய ஆசிய நாடுகளுடனான இணைப்புக்கு, இந்தியா அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் இணைப்பை ஏற்படுத்துவதற்கு தயாராக உள்ளோம்.

ஆப்கன் விவகாரத்தில் நமக்கான முன்னுரிமைகள், முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் ஆகியவை குறித்து இந்தியாவுக்கு கவலை இருக்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. நம் அனைவருக்குமானது. குழப்பம் நிறைந்ததாகவும், எதிர்காலம் நிச்சயமற்றதாகவும் உள்ள நிலையில் நமது இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அமைதியான, பாதுகாப்பான, வளமான பகுதியாக மத்திய ஆசியா திகழ வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.