பொதுவெளியில் மீண்டும் அவமானப்படுத்தப்பட்ட மன்னர் சார்லஸ்: ஒருவர் கைது


மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு தாக்குதல் மூனெடுக்கப்பட்ட நிலையில், தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சார்லஸ் மீது முட்டை வீச்சு

குறித்த சம்பவம் லூடன் பகுதியில் நடந்துள்ளது. திரண்டிருந்த பொதுமக்களிடையே மன்னர் சார்லஸ் நெருங்கி சென்று நலம் விசாரிக்கும் நிலையில் முட்டை வீசப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொதுவெளியில் மீண்டும் அவமானப்படுத்தப்பட்ட மன்னர் சார்லஸ்: ஒருவர் கைது | Man Throws Egg At King Charles

@PA

இதனையடுத்து, 20 வயது கடந்த இளைஞர் ஒருவரை சம்பவயிடத்தில் இருந்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து மன்னர் சார்லஸ் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால், அதே பகுதியில் இன்னொரு பக்கத்தில் மக்களை சந்தித்து மன்னர் சார்லஸ் கை குலுக்கியுள்ளார்.
லூடன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குருநானக் குருத்வாராவுக்கு விஜயம் செய்யும் நோக்கில் அப்பகுதிக்கு சார்லஸ் சென்றுள்ளார்.

குருத்வாராவில் சார்லஸ்

மட்டுமின்றி, தொடர்புடைய சமுதாய தலைவர்களையும் தன்னார்வலர்களையும் மன்னர் சார்லஸ் சந்தித்துள்ளார்.
காலணிகள் இல்லாமல் தலையில் துண்டு ஒன்றை கட்டிக்கொண்டு, சீக்கிய முறைப்படி குருத்வாராவில் மன்னர் சார்லஸ் காணப்பட்டார்.

பொதுவெளியில் மீண்டும் அவமானப்படுத்தப்பட்ட மன்னர் சார்லஸ்: ஒருவர் கைது | Man Throws Egg At King Charles

@PA

மட்டுமின்றி, சீக்கியர்களின் புனித நூலையும் வணங்கி அவர் மரியாதை செலுத்தியுள்ளார்.
மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்படுவது இது இரண்டாவது முறை. யார்க் பகுதியில் 23 வயதான Patrick Thelwell என்பவர் சார்லஸ் மீது முட்டை வீசிய விவகாரத்தில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.