கோட்டாபயவின் தவறான செயல்:வெளியான தகவல்


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானத்தினால் நாட்டிற்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

கோட்டாபய ஆட்சி

கோட்டாபய ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு தொடருந்து போக்குவரத்து திட்டத்தை நிறுத்தியுள்ளார்.

கோட்டாபயவின் தவறான செயல்:வெளியான தகவல் | Gotabaya S Decision Cost 5 000 Billion Rupees

இதனால் நாட்டுக்கு 5,978 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் இந்த திட்டம் பொருத்தமான செலவு குறைந்த போக்குவரத்து தீர்வாக இல்லை என்று குறிப்பிட்டு 2020 செப்டெம்பர் 21ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் அப்போதைய ஜனாதிபதி செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

12 வருட சலுகைக் காலம்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், 12 வருட சலுகைக் காலம் உட்பட 40 வருட காலப்பகுதியில் இந்த திட்டத்துக்கான கடனைச் செலுத்தும் வசதியை வழங்கியிருந்தது.

கோட்டாபயவின் தவறான செயல்:வெளியான தகவல் | Gotabaya S Decision Cost 5 000 Billion Rupees

இதற்கான வருடாந்த வட்டி வீதம் 0.1 சதவீதமாக இருந்தது.

இதேவேளை 2021 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இந்த திட்டம் தொடர்பில் 604 மில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்தவேண்டியிருந்தது.

எனினும் இன்னும் அது செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.