“Mandous” புயல் 3 மணி நேரத்தில், மணிக்கு 08 கி.மீ வேகத்தில் நகர்வு – கடல் கொந்தளிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான “மாண்டஸ்” “Mandous” புயல் கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 08 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.தாக இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று டிசம்பர் 08, 2022 அன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அட்சரேகைக்கு அருகில் புயல் அமைந்தது. 9.3°N மற்றும் தீர்க்கரேகை 84.4°E, காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 560km மற்றும் தமிழகத்தின் சென்னைக்கு தென்கிழக்கே 620 km தொலைவில் புயல் காணப்படுகிறது

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் டிசம்பர் 09 ஆம் திகதி நள்ளிரவில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அடுத்த ஒரு மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மற்றும் ராமநாதபுரம் மற்றும் புதுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் நீலகிரி, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. என்று சென்னை மண்டல வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கொந்தளிக்கும் கடற்கரை

மாண்டோஸ் புயல் உருவானதை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. சென்னை மெரினா கடல், வழக்கத்தை விட பேரலைகளுடன் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை,கல்லார், வேளாங்கண்ணி,காமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டது. வழக்கத்தைவிட அலையின் சீற்றம் 2 அடிக்கு மேல் இருந்து வருவதால், மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். சுமார் 25க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் “மாண்டஸ் புயல்” மழையினை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளது. 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என 346 ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை தொடர்பான எச்சரிக்கைகளை அளித்திட 26 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களாக 12 பகுதிகள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 33, குறைந்த அளவு பாதிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 4500 க்கும் அதிகமான முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைத்து வட்டங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளார்கள்.

மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் புயல் மழை காலங்களில் பாதுகாப்பாக இருக்கவும், அரசின் எச்சரிக்கைகளை முழுமையாக கடைபிடித்து நடந்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது என மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புயல் உருவானதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதே போல, பாம்பன் துறைமுகத்திலும் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.