chennai rainfall: 1000 மி.மீ மழை பதிவை இந்தமுறை எட்டுமா சென்னை? தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாவதும், இதன் விளைவாக தமிழகத்தின் கடலோர மற்றும் அதனையொட்டிய உள்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்ப்பதுடன், புயலால் பலத்த சேதம் ஏற்படுவதும் வழக்கமாக நிகழ்வாக உள்ளது.

புயல் சின்னம் உருவாகும் காலத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக, வானிலை ஆய்வு மையம், அன்றாடம் வழக்கமாக தரும் வானிலை நிலவர அப்டேட்டுடன், அவ்வபோது கூடுதல் அப்டேட் அளிப்பதும் வருகிறது. வானிலை ஆய்வு மைய தகவலின்படி, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது உள்ளிட்ட முடிவுகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுத்தும் வருகின்றன. இந்த விதத்தில் பருவமழை காலத்தில் வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட் அரசு நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் வெதர் அப்டேட் ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்புடும் பிரதீப் ஜான் என்ன சொல்கிறார் என்று பொதுமக்கள் ஆர்வமுடன் கேட்கும் அளவுக்கு அவரது வெதர் அப்டேட் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்று வருகிறது. பொதுமக்களின் இந்த மனஓட்டத்தை புரிந்து, வெதர்மேனும் பருவமழை காலங்களில் தவறாமல் வானிலை நிலவரம் குறித்து தமது பார்வையில் எச்சரிக்கை, அறிவுறுத்தல்களை அளித்து வருகிறார்.

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!

வடகிழக்கு பருவமழை காலம் ஏறக்குறைய முடிவடைய உள்ள நிலையில், நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழை காலத்தில் சென்னை மாநகர் முந்தைய ஆண்டுகளில் பெற்றிருந்த மழை அளவு பதிவை, இந்த ஆண்டு முறியடிக்குமா, இல்லையா என்பது குறித்த சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களை பகிர்ந்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், ” நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில், 2020 இல் சென்னை மாநகரில் மொத்தம் 1034 மில்லிமீட்டரும், 2021 இல் 1485 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.

இந்த ஆண்டு. இன்று மாலை 5:30 வரையில், மொத்தம் 924 மில்லிமீட்டர் மழையை சென்னை மாநகரம் இப்பருவ மழை காலத்தை பெற்றுள்ளது. 1000 மில்லி மீட்டர் எனும் மைல்கல்லை கடக்க இன்று 76 மில்லி மீட்டர் மழை தேவை. 19 டிசம்பர் முதல் அதிக மழையுடன் நாம் வரலாற்றை நோக்கிச் செல்கிறோம்” என்று தமது பதிவில் தமிழ்நாடு வெதர்மேன் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

அரபிக் கடலில் வரும் 16 ஆம் தேதி, புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.